உயர் கல்வி

     AIEEE- என்ற நுழைவு தேர்வு இந்தியாவில் உள்ள மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில்B.E/B.Tech, B.Arch/B.Plan படிக்க நடத்தும் தேர்வாகும்.

இந்த தேர்வை பற்றி தமிழக முஸ்லீம் சமுதாயம் பெரும்பாலும் அறியாமலேயே உள்ளது. AIEEE -2010 தேர்வை பற்றிய முழுவிபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 20 இடங்களில் NIT-என்றஉயர்கல்வி நிறுவனம் மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகின்றது. இதை தவிற பிட்ஸ் பிலானி, மற்றும் நிகர் நிலை பல்கலை கழகங்கள் மற்றும் டெல்லி பல்கலை கழகம் போன்ற மத்திய பல்கலை கழகங்கள் ஆகியவற்றில் படிக்க AIEEE என்ற நுழைவு தேர்வை மத்திய அரசு நடத்துகின்றது, இதில் நாம் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் எடுப்பதின் மூலம் இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் பயில முடியும். இந்த உயர்கல்வி நிறுவங்களில் கல்வி தரம் உயர்ந்ததாக இருக்கும் , இங்கு படிப்பவர்களுக்கு வளாக தேர்வு (campus interview) மூலம் மிக எளிதில் வேலைகிடைகின்றது.

இறுதி ஆண்டு படிக்கும் போதே அதிக சம்பளத்தில் படித்ததற்க்கு ஏற்ப நல்ல வேலைகிடைக்கின்றது. மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்புகளும் கிடைக்கின்றன கல்வி உதவியில் மத்திய அரசு ஐஐடியை போலவே NIT-க்கும் முன்னுரிமை கொடுக்கின்றது. இந்தியாவில் பொறியியல் துறையில் ஐஐடி-க்கு அடுத்து முன்னனியில் இருப்பது NIT தான். தமிழகத்தில் திருச்சியில் NITஉள்ளது. இன்னும் சில NIT-கள் தமிழகத்தில் வர இருக்கின்றது. தமிழகத்தில் இருந்தாலும் AIEEE என்ற தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே இங்கு படிக்க முடியும். இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இத்த தேர்வுகள் கடினமில்லை.

இட ஒதுக்கீடு : NIT-யில் (முஸ்லீம்களையும் சேர்த்து) பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கா 27% இட ஒதுக்கீடு உள்ளது.

AIEEE 2010 : தற்போது NIT-யில் (பிற மத்திய பல்கலை கழகங்களையும்சேர்த்து) +2 படித்த மாணவர்கள் 2010 ஆண்டு பொறியியல் படிப்பிற்க்கு சேர்வதற்க்கான நுழைவு தேர்வின் (AIEEE -2010) விண்ணப்பம் விணியோகிகப்பட்டு வருகின்றது. (தேர்வை பற்றிய விபரங்கள் அட்டவணை இடம் பெற்றுள்ளது). விண்ணப்ப படிவம் பெறுவதில் பிரச்சனை இருந்தால் நமது மாணவரணி சகோதரர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்

மாணவ மாணவியர்களே!

பெரும்பாலும் நாம் படிப்பது நமது கல்வி தரத்தை உயர்த்திகொள்வதற்க்கும், நல்ல வேலையில் சேர்ந்து நல்ல சம்பளம் பெறுவதற்க்கும், வெளி நாடுகளில் சென்று படித்து சிறந்த கல்வியை பெற்று நல்ல சம்பளத்துடன் நல்லவேலையில் சேர்வதற்க்கும்தான்.
கல்வி துறையில் முன்னேற வேண்டும் என்றால் இது போன்ற நுழைவு தேர்வு தேர்வுகளை எழுதி அதில் நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும். ஏதோ எல்லாரும் படிக்கின்றனர் நானும் படிக்கின்றேன் என்று இருந்துவிடக்கூடாது, எப்படியாவது தேர்வில் பாஸ் பன்னிவிடலாம் நமது பெற்றோர்கள் எங்காவது கடன் வாங்கியாவது நம்மை படிக்கவைத்துவிடுவார்கள் என்று தவறாக கணக்கு போட்டு தேர்வில் கோட்டைவிட்டுவிடதீர்கள், .
பணத்தை வைத்து கல்லூரியில் இடம்தான் வாங்கமுடியும், படிப்பை வாங்கமுடியாது, வேலையையும் வாங்க முடியாது, நன்றாக படித்தால் தான் நல்ல வேலைகிடைக்கும், எனவே பெற்றோர்களின் பணத்தை வீணாக்காமல் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் சேர முயற்சி செய்யுங்கள்., என்னதான் பணத்தை கொட்டி கொடுத்து படித்தாலும் இது போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் கிடைப்பது போன்ற கல்வி அறிவோ, வேலை வாய்ப்பு வசதிகளோ தனியார் பொறியியல் கல்லூரிகளில் கிடைப்பதில்லை. என்ன மதிப்பெண் எடுத்தாலும் நம் பெற்றோர் பணத்தை கொடுத்து ஏதாவது ஒரு (முஸ்லீம்) பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிடுவார்கள் என எண்ணாதீர்கள்.

பொதுவாக முஸ்லீம் பொறியியல் கல்லூரிகளில் கல்வி தரம் மிக குறைவாகவே உள்ளது, ஆனால் இவர்கள் வாங்கும் பண்ணமோ மிக மிக அதிகமாக உள்ளது. எனவே முஸ்லீம் பொறியியல் கல்லூரிகளில் படிக்க வேண்டும் என்ற தவறான எண்ணத்தை தூக்கி போடுங்கள், IIT-JEE, AIEEE போன்ற தேர்வுகளை எழுதி, அதில் அதிக மதிப்பெண் எடுத்து ஐஐடி, NIT போன்ற உயர்கல்வி நிறுவங்களில் சேர முயற்சி செய்யுங்கள். தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்வின் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.

உங்களுக்கு உதவ நமது மாணவரணி எப்போதும் தயாராக இருகின்றது, உங்களுடைய கல்வி முன்னேற்றத்திற்க்கு நமது மாணவரணியை பயன்படுத்தி கொள்ளுங்கள். உயர் கல்வி நிறுவனங்களில் முஸ்லீம்களை படிக்கவைக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்படுகின்றது நமது TNTJ மாணவரணி, தமிழகத்தின் மூலை முடுக்குகளெள்ளாம் விழிபுணர்வு பிராசாரங்களையும் வழிகாட்டும் முகாம்களையும் நடத்தி வருகின்றது.

AIEEE 2010 நுழைவு தேர்வுக்கென்றே சிறப்பு வழிகாட்டுதல் குழுவை நமது மாணவரணியில் ஏற்படுத்தி உள்ளோம். நமது சகோதரர்களை தொடர்பு கொண்டு AIEEE 2010 தேர்வுகளை பற்றிய விளக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

ஆக்கம்:
S.சித்தீக்M.Tech
TNTJ மாணவரணி