எனக்கென்று ஒரு முறை

உனக்கு நினைவிருக்கிறதா...?!!
நாம் சந்தித்துக்கொண்ட அந்த முதல் நாளில்
நான் உன்னைப் பார்த்தபோது
நீ என்னைப் பார்த்துச் சிரித்தாய்!!!
நீ சிரித்தது என்னைப் பார்த்துதானா
என்பதெல்லாம் எனக்கு இன்றுவரைத் தெரியாது!!!
நீ என்னவோ மெல்லத்தான் சிரித்தாய்..
ஆனால் அதுதான் எதிரொலித்துவிட்டது பலமாக
என் இதயத்தில்!!
அன்று எழுதி வைத்தேன் இப்படி
என் வாழ்க்கையின் முதல் கவிதையாக...
"உனக்கென்ன நீ சிரித்துவிட்டாய்..
உன் கன்னத்துக் குழிக்குள் நானல்லவா
வி
ழு
ந்து
விட்டேன்!!!"
அன்றுவரை வெறுமையை மட்டுமே
வாழ்க்கையாக கொண்டிருந்த என் டயரியின் பக்கங்கள்
பின்னாளில் உன்னைப் பார்த்த நாட்களில் எல்லாம்
நிரம்பிப் போயின உன் நினைவுகளாலேயே!!
உன்னைப் பார்க்காத நாட்களில் எல்லாம்
என் இதயம் சுவாசிப்பது
இந்த டயரியின் பக்கங்களைத்தான்...
அப்போதெல்லாம் நான் நினைத்துக் கொள்வது இதைத்தான்...
நீ வாழும் இந்த பக்கங்களிலேயே நான் புதைந்துவிடக் கூடாதா?!!!
நிறைவேறாது என்று தெரிந்திருந்தும்
இந்த நினைவை என்னால் தவிர்க்க முடிந்தது இல்லை!!
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்..
இந்த பக்கங்களில் நான் புதையாவிட்டாலும்
இந்த மண்ணில் ஒரு நாள் நான் புதையத்தான் போகிறேன்...
அப்படி நான் புதையும் முன்
எனக்கே எனக்கு என்று
ஒரு முறை என்னைப் பார்த்துச் சிரித்துவிடு!!!
அதுபோதும் எனக்கு...
அந்த மண்ணுக்குள்ளும் நான் சுகமாய் சுவாசிப்பேன்!!!